குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்கிய எஸ்.கல்யாண் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் 80ஸ் பில்டப்.
இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி நடித்திருக்கிறார். மேலும் இதில் சங்கீதா, கே.எஸ்.ரவிகுமார், மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், தங்கதுரை, கூல் சுரேஷ், மனோ பாலா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
வசூல்
இந்நிலையில் 80ஸ் பில்டப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் ரூபாய் 1.2 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.