சந்தானம் மனசு யாருக்கு வரும்- ஆச்சரியத்தில் கோலிவுட்

520

சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்து வெற்றியும் பெற்றுவிட்டார். இதை தொடர்ந்து அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேலும், இவரின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் எங்கும் இவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் அடுத்து நடித்து வரும் சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷின் பேரன்கஜேஷை நடிக்க வைக்கின்றாராம். சர்வர் சுந்தரம் என்பது நாகேஷ் படத்தின் பெயர் என்பதால், வெறும் டைட்டில் மட்டும் வைக்காமல், அவருடைய பேரனுக்கு வாய்ப்பு கொடுப்பது கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE