சந்தியா சிங்கள அக்கடமியின் வருடாந்த பரிசளிப்பு விழா – 2018

132

இல.98, பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள சந்தியா சிங்கள அக்கடமியின் சிங்களம் கற்கும் தமிழ் மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா 16.09.2018 அன்று இயக்குனரும், ஆசிரியருமான திருமதி ஆர். என். சந்தியாகுமாரி தலைமையில்  நடைபெற்றது.

யாழ் சுண்டுக்குளி குறுசெற் வீதியில் அமைந்துள்ள கிறீன் பீல்ட் விளையாட்டுக்கழக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக  யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும்  அல்லைப்பிட்டி – மண்டைதீவு பங்குத்தந்தையுமாகிய அருட்பணி. மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார், யாழ். பேராலய பங்குத்தந்தை அருட்பணி ஆர். நேசராஜ் அடிகளார் மற்றும் அருட்பணி எட்மன் மைக்கல் அடிகளார் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வைத்திய கலாநிதி என்.என். கமலராஜன் மற்றும் சென். ஜேம்ஸ் மகாவித்தியாலய ஆசிரியர் திரு. என். கீதபொன்கலன் ஆகியோரும் மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து யா/மண்டைதீவு றோ.க.வித்தியாலய அதிபர் திரு. யோண் கொலின் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் சந்தியா கல்வி நிலைய இயக்குனரும் ஆசிரியருமான திருமதி ஆர். என். சந்தியாகுமாரி அவர்களுடன் இணைந்து வயது வேறுபாடின்றி இங்கு கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் அனைவரும் சிங்கள பாரம்பரியத்தின்படி ஆடையணிந்து, விருந்தினர்களுக்கு வெற்றிலை கொடுத்து வரவேற்றதுடன், அனைத்து நிகழ்வுகளையும் சிங்களம் தமிழ் என இரு மொழிகளிலும் வழங்கி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின்  பதிவுகளைப் படங்களில் காணலாம்.

 

SHARE