நடிகை ராதிகா சினிமாவில் தன் நடிப்பு மூலம் பெரிய இடத்தில் இருக்கிறார். அதே லெவலில் தான் இப்போது சீரியலில் இருக்கிறார்.
இவரே தயாரித்து, நடித்து என சின்னத்திரையில் பல வெற்றிகள் கண்டுள்ளார். சமீபத்தில் இவரே தயாரித்து நடித்துவந்த சீரியல் சந்திரகுமாரி, இது சரியாக ஓடாததால் அதில் இருந்து விலகிவிட்டார். இதே சீரியலில் முக்கிய வில்லியாக நடித்து வந்தவர் உமா ரியாஸ்.
அண்மையில் ஒரு பேட்டியில், சந்திரகுமாரி சீரியலில் நான் இருக்கிறேனா இல்லையா என்பதே தெரியவில்லை. ராதிகா அவர்கள் இருந்தவரை எனது வேடத்திற்கு முக்கியத்துவம் இருந்தது, இப்போது சுத்தமாக இல்லை என மிகவும் வருத்தமாக கூறியுள்ளார்.