சந்திரமுகி படப்பிடிப்பில் சேட்டை செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த்

67

 

ரஜினிகாந்த திரைப்பயணத்தில் வெற்றிப் படங்களில் அமைந்த ஒரு திரைப்படம் சந்திரமுகி.

2005ம் ஆண்டு பி.வாசு அவர்களின் இயக்கத்தில் ரஜினி, பிரபு, நாசர், வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க சந்திரமுகி படம் வெளியாகி இருந்தது.

வித்யாசாகர் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே செம ஹிட் தான். 1993ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த Manichitrathazhu என்ற படத்தின் ரீமேக் தான் சந்திரமுகி என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

ரூ. 19 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 90 கோடி வரையிலான வசூலை பெற்றிருந்தது.

அன்ஸீன் வீடியோ
தற்போது சந்திரமுகி 2 ராகவா லாரன்ஸ் நடிக்க சில தினங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்திரமுகி படப்பிடிப்பில் சேட்டை செய்த அன்ஸீன் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

SHARE