சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு.. படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ

107

 

சந்திரமுகி திரைப்படம் எவ்வளவு ஹிட்டானது என்பதை உலகமே அறியும். ரஜினியின் கெரியரில் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடிய திரைப்படம் என்றால் அது சந்திரமுகி தான்.

சந்திரமுகி 2
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 இன்று திரையரங்கில் வெளிவந்துள்ளது. பி. வாசு இயக்கியுள்ள படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.

மேலும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, வடிவேலு, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், ஸ்ருஷ்டி என பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

விமர்சனம்
இந்நிலையில், இன்று படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். அவர்கள் கூறியுள்ளபடி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

‘ஆவெரேஜ் முதல் பாதி, டீசண்டாக செல்லும் இரண்டாம் பாதி என குறிப்பிட்டுள்ளனர். திரைக்கதை ஓகே, இசை மற்றும் பிளாஷ்பேக் ரசிக்கும்படி இல்லை. ஆனால், ராகவா லாரன்ஸ் நடிப்பு சூப்பர்’ என குறிப்பிட்டுள்ளனர்.

SHARE