சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல்: குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டு சிறை தண்டனை

332
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக்குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலைச் செய்தார்.

சந்திரிக்கா மீது தற்கொலை தாக்குதல்! இருவருக்கு சிறைத்தண்டனை- பெண்ணொருவர் விடுதலை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தற்கொலை குண்டுதாரியை பயன்படுத்தி கொலை செய்யும் முயற்சிக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இரண்டு பேரை குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டு பேரை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி பத்மினி ரணவக்க பெண்ணொருவரை குற்றச்சாட்டில் இருந்து முற்றாக விடுதலை செய்துள்ளார்.

குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள ஒருவருக்கு 260 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நீதிபதி, அந்த தண்டனையை 30 வருடத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மற்றைய குற்றவாளிக்கு 300 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, அவரும் தண்டனை 30 ஆண்டுகளுக்கு அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

வேலாயுதம் உதயராஜா மற்றும் சந்திரா சர்மா ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பூபதி சர்மா என்ற பெண்ணே குற்றச்சாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி கொழும்பு நகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொது ஜன ஐக்கிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்ட மேடைக்கு அருகில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காயமடைந்ததுடன் ஒரு கண்ணை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE