சந்திரிக்காவும் போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்!- அனந்தி

232

ananthi-sasitharan

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென வட மாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் களனி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சந்திரிக்கா ஆட்சிக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.

சந்திரிக்கா 1983ம் ஆண்டு ஜூலை கலவரம் தொடர்பில் விசாரணை நடத்திய போதிலும் அதனுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் சந்திப்பில் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகித் என்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

SHARE