ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்களை தனித்தனியாக தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நான்கு சந்தேக நபர்களை தனித்தனியாக தடுத்து வைத்து விசாரணை நடாத்த புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரியிருந்தனர்.
இந்தக் கோரிக்கைக்கு அமைய சந்தேக நபர்களை தனித் தனியாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த ஹோமகம நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 6ம் திகதி வரையில் விசாரணை நடாத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அழுத்தங்களை பிரயோகிக்காது வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென நீதவான் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதி ஒன்றில் எக்னெலிகொட காணாமல் போயுள்ளார்.