சந்தை தொகுதிக்கான கேள்வி கோரலை பிரதேசத்திற்குள் கோருங்கள்! மக்கள் ஆர்ப்பாட்டம்

243

வவுனியா – செட்டிகுளம் பிரதேச சபையினால் நெல்சிப் திட்டத்தில் அமைக்கப்பட்ட சந்தை கட்டடத் தொகுதியை வாடகைக்கு விடுவதற்கான கேள்வி கோரலை மாவட்ட ரீதியில் கோராது செட்டிகுளம் பிரதேசத்தில் கோர வேண்டும் என தெரிவித்து இன்று (21) மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டடத் தொகுதி வளாகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டக்காரர்கள் “உள்ளூர் வியாபாரிகளின் வயிற்றில் அடிக்காதே, உள்ளூர் பொருளாதாரத்தை அதிகரி, செட்டிகுளம் பிரதேச அதிகாரிகளே செட்டிகுளம் மக்களின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்து” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப. சத்தியசீலன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக வட மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கொடுத்த உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதுடன் பிரதேச சபையின் செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

SHARE