சனிப்பெயர்ச்சி பலன்கள்- விருச்சிகம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

183

 

1193ம் ஆண்டு ஹேமலம்ப- ஹேவிளம்பி வருடம் மார்கழி 1ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.38க்கு (16- 12- 2017) அன்று சனீபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுஷ் ராசிக்கு பிரவேசிக்கிறார்.

தனுஷ் ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் தங்க உள்ளார், இந்நிலையை கொண்டு மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளுக்கும் நடக்கக்கூடிய பலாப்பலன்களை ஆன்மீக ஜோதிடர் S.P.ராஜன் D.A., கணித்துள்ளார்.

விருச்சிகம்

இரண்டு மான்கள் – ஒரு சின்ன புலி இதுதான் உங்கள் ராசியின் நட்சத்திர மிருகங்கள். ஆனால், உங்கள் ராசியின் சின்னமே தேள்.

இது தமிழ் ஜாதக ராசியின் குறியீடு என்றால் இங்கிலீஷ்காரர்களின் சின்னம் அதாவது ராசியின் குறியீடு, யுத்த காலத்தில் வாளுடனும் – கேடயத்துடன் போராடும், ஒரு போர் வீரனின் உருவம் இருக்கும். இது அவர்கள் சின்னம்.

ராசியின் குணம் என்னவென்றால் எப்போதும் சுறுசுறுப்புடன் கடமைகளை உடனுக்குடன் செய்துவிடும் தன்மை. சதா உழைப்பு. எதற்கும் அஞ்சாமை. குற்றம் உள்ளவர்களை தயங்காமல் எதிர்க்கும் சுபாவம்.

சினம் சென்றாவது நன்மைகளை கற்றுகொள்ளும் ஆற்றல், உறவும், உண்மையும், பேச்சில் இனிமையும் கொண்டவர்கள். ஆனால் எதிரிகளுக்கு தயங்காமல் தண்டனை கொடுக்கும் செயல்.

யாரை பற்றியும் கூசாமல் குறை கூறும் சுபாவம், வம்பு – வழக்கு என்றால் அல்வா சாப்பிடுவது போல், ஒரு தனி பிரியம். இது தான் விருட்சிகம்.

இதை தான் நம் ஜாதகப்படி ராசிக்கு தேளை கொடுத்தார்கள். தேளை பார்ப்பவர்களுக்கு, அடி வயிற்றில் ஒரு அச்சம் தோன்றும் அது போல தான் விருட்சிக ராசிக்காரர்களை கண்டாலே எல்லோரும் பயப்படுவார்கள்.

மேலை நாட்டு ஜாதகப்படி போர்வீரன் என்ன செய்வான், அச்சத்தையும் – பரிதாபத்தையும் தூக்கி எரிந்தால் தான் போரில் வெற்றியினை காணலாம்.

கடந்த காலத்தில் நீங்கள் யாவருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து இருப்பீர்கள். நலத்தை நாடி, துக்கத்தை வாங்கி இருக்கக்கூடும்.

தற்போது வியாழன் 12-ல் சனி-2-ல் இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். சிலருக்கு வேரோடு சாயும் வண்ணம் பலன்கள் தூக்கும்.

உங்கள் ஜாதகப்படி நல்லவிதமான திசாபுத்திகள் நடந்தால் பயம் இல்லை. ஒருவேளை உங்கள் ஜாதகப்படி ஹம்ச யோகம் அல்லது சசயோகம் அமைந்து இருந்தால் நலம் உண்டாகும்.

இல்லையென்றால் கசப்பான பல தொல்லைகளை இந்த ராசிக்காரர்கள் அனைவருமே அனுபவிக்கவேண்டும்.

ஜாதகப்படி சிலருக்கு நிரம்பவே படி விழுந்தும் இருக்கலாம். அது உங்கள் அதிர்ஷ்டம். ஆனால் நிரம்பவே உங்கள் ராசி துன்பத்தில் உள்ளது.

இதை இன்பமாக கூட்ட வழியும் உண்டு. உழையுங்கள் ஏதேனும் நல்லபடி பலம் உண்டு.

உழையுங்கள் –ஏதேனும் நல்லபடி பலம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு, மூச்சுவிடக் கூட நேரம் இல்லாமல் உழைத்திருப்பீர்கள்.

பலன் தான் ஒன்றும் இல்லை. சிலருக்கு வேலை போய் இருக்கும். சிலர் கோர்ட் வழக்கு என்று அழையலாம். பதவீ உயர்வுக்கு காத்திருக்க வேண்டும். கடமையில் கண்ணாய் இருக்கும் நபர்களுக்கு பயம் இல்லை.

சட்டப்படி நடந்தாலும், திட்டம் போட்டு கவித்து விடும் கும்பல் உங்களை சுற்றி இருக்கும். மான் தன்மை உள்ளவர்களே, மாய வலையில் சிக்க வேண்டாம். மயக்கும் பெண்களிடம் பொல்லாதவர் என பெயரை எடுக்கலாம்.

தூங்கி வழிந்தாலும் சரி சும்மாவே இன்னும் 2 ஆண்டை கழியுங்கள் பின் சுறுசுறுப்புடன் செயல்பட்டு இழந்ததை மீட்டு விடலாம்.

இந்த ராசியின் பெண்களுக்கு கஷ்டப்பட்டு காரிய வெற்றி கிடைக்கலாம். காலத்தை உணர்ந்து கனிவோடு நடந்தால் இருப்பதை காப்பாற்றலாம்.

அதிர்ஷ்ட எண்கள்- 1,2,3,9

அதிர்ஷ்ட நிறம்- சிவப்பு, ரோஸ்

அதிர்ஷ்ட கல்- பவளம்

வணங்க வேண்டிய தெய்வம்- ஸ்ரீ சுப்பிரமணியர்

– See more at: http://www.manithan.com/news/20170331126062#sthash.BI4qEl0y.dpuf

SHARE