நடிகர் ராகவா லாரன்ஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். இவர் யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக உதவக்கூடியவர்.
அதிலும் கல்வி என்று யாராவது உதவி கேட்டு வந்தால் உடனே உதவி செய்துவிடுவார். இந்நிலையில் நேற்று சன் சிங்கர் நிகழ்ச்சியின் பைனல் பிரமாண்டமாக நடந்தது.
இதில் ஸ்ருதி, பிரபுதேவா, யுவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர்.
இந்த போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற லக்ஷனாவின் படிப்பு செலவு முழுவதையும் லாரன்ஸ் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.