சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வந்த இலங்கை பிரபலம்- யார் பாருங்க, ஆரம்பமே அதிரடி

104

 

சன் தொலைக்காட்சி என்றாலே இப்போது ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது எதிர்நீச்சல் சீரியல் தான். திருச்செல்வம் நீண்ட இடைவேளைக்கு பிறகு சன் டிவியில் இயக்கிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.

மாரிமுத்து அவர்களின் திடீர் உயிரிழப்பால் கதைக்களத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, ஆதி குணசேகரனாக, வேல ராமமூர்த்தி சில காட்சிகள் வந்தார்.

ஆனால் உடனே அவர் சில காரணங்களால் ஜெயிலுக்கு சென்றுள்ளது போல் காட்டியுள்ளனர்.

புதிய எண்ட்ரி
இப்போது திருவிழாவில் எதிர்நீச்சல் சீரியலின் டுவிஸ்ட் உள்ளது, யாருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம். எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி-சக்திக்கு பிரச்சனை தரும் கிருஷ்ணா என்ற பிரபலம் அறிமுகமாகியுள்ளார்.

நடிகராக, இயக்குனராக, தொகுப்பாளராக வலம் வந்தவராம், இவரது நிஜ பெயர் ஆர்ஜே நெலு, இலங்கை மட்டக்களப்பு பகுதியை சார்ந்தவராம். இலங்கையில் உள்ள சக்தி டிவியில் முதல்முறையாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

ஜிபிஎஸ், கடலாய் காதல் என்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

SHARE