சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க மகிந்த

18

 

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க மகிந்த ராஜபக்ச வாக்களித்த போதிலும், நாமல் ராஜபக்ச அதனை தவிர்த்துள்ளமை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.

தச பல சேனா எனும் பிரச்சாரத்தின் பலத்தை நாமல் ராஜபக்ச மகிந்த ராஜபக்சிவிடம் காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தற்போது சிறையில் உள்ள கெஹலிய ரம்புக்வெல்லவும் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாக்களிக்க வந்தமை விசேட கவனத்தைப் பெற்றுள்ளது.

அரசியல் செயற்பாடு
சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவர் நாடாளுமன்றத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

குறிப்பாக நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் செயற்பாட்டிற்கு மகிந்த யாப்பா அபேவர்தன அதிக வேலைகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE