சபாநாயகரை தாக்கமுயற்சி!-பெரும் குழப்பம்!
நாடாளுமன்றம் அதிரடிப்படையிடம்!!
அடி தடி #பாராளுமன்றம்
Posted by நெற்றிக் கண் on Rabu, 14 November 2018
சிறிலங்கா பிரதமர்(?); மஹிந்த ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் அங்கு பெரும் குழப்பங்கள் தோன்றின.
மஹிந்தவின் அமைச்சரவைக்கு எதிராக வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு லக்ஸ்மன் கிரியெல்ல(ஐ.தே.க) கோரியதையடுத்து சபாநாயகர் ஆசனத்தை நோக்கிமகிந்த மைத்திரி தரப்பு நகர ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக அவரைச் சுற்றி வளைத்தனர்.
இந்தவேளை சபாநாயகர் மீது குப்பைக்கூடைகள் போன்ற பொருட்களும் வீசப்பட்டன. சபையில் ஏற்பட்ட இந்த குழப்ப நிலையால் சில உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
இதனையடுத்து அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டன. நாடாளுமன்றத்தில் இனிமேல் பிரதமரையோ அமைச்சரவை அமைச்சர்களையோ ஏற்றுக் கொள்வதில்லை என கூறிவிட்டு சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியேறினார். ரணிலும் மகிந்தவும் வெளியேறினர்.
இதன் பின்னர் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கத் சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்தார்
இதற்;கிடையே நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமளியை அடுத்து, நாடாளுமன்ற வளாகம் அதிரப்படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அதேபோல கொழும்பில் உள்ள அமைச்சகங்கள் அனைத்தும் அதிரப்படையினரின்பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்