சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியல் அமைப்பிற்கு முரணாக செயற்பட்டு வருகின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு அமைய காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தில் கையொப்பமிட சபாநாயகருக்கு முடியாது.
அரசியல் அமைப்பின் நியதிகள் மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையிலேயே சட்டமொன்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
இந்த சட்டம் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை.இந்த விடயம் குறித்து நாடாளுமன்றின் கவனம் உரிய வகையில் செலுத்தப்படவுமில்லை.
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தினால் நாட்டில் பாரிய வியாகூல நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் இவ்வாறான ஒர் சட்டத்திற்கு எந்தவொரு சபாநாயகரும் கைச்சாத்திட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.