சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்படுகின்றது

289

இந்த நாட்களில் மிகவும் வேகமாகப் பரவிவரும் காய்ச்சல் காரணமாக சப்ரகமுவபல்கலைக்கழகமானது எதிர்வரும் 20ம் திகதி வரை மூடப்படவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஒரு சில பீடங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு,அனைத்துபீடங்களுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் காய்ச்சலைகட்டுபடுத்துவது, விடுதிகளை சுத்தம் செய்வது, பல்கலைக்கழக மாணவர்கள்பயன்படுத்தும் நீரினை பரிசோதனை செய்தல், நோய் பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்புநடவடிக்கை எடுத்தல் என்பவற்றிற்காக மாணவர்களுக்கு விடுமுறைவழங்கப்பட்டுள்ளதாக இதன் பீடாதிபதி எச்.எஸ்.ஆர்.ரொசய்ரோ குறிப்பிட்டுள்ளார்.

எனவே இன்றிலிருந்து பல்கலைக்கழகம் மூடப்படவுள்ளதாகவும், மாணவர்கள் அனைவரும்நாளை மாலை 6மணிக்கு முதல் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது

download

SHARE