சமந்தா நாக சைதன்யா இருவரும் தற்போது ரியல் கணவன் மனைவி. திருமணத்திற்கு பின் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காது என்ற கூற்றை சமந்தா பிரேக் செய்துவிட்டார் என்று சொல்லலாம்.
தமிழ், தெலுங்கு என அவரின் படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கிறது. அண்மையில் சூப்பர் டீலக்ஸ் படம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் திருமணத்திற்கு பின் தன் கணவருடன் சமந்தா நடித்துள்ள மஜிலி படம் வெளியாகியுள்ளது. நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் சென்னையில் 3 நாட்களில் ரூ 10 லட்சம் வசூலித்துள்ளதாம்.
மேலும் நல்ல ஓப்பனிங் என்று சொல்லப்படுகிறது.