நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ஒரு பிசியான நடிகையாகிவிட்டார். கடந்த அக்டோபர் மாதம் இவருக்கு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கு திருமணம் கோவாவில் இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.
ஒரு வாரத்திலேயே மகாநதி படத்தில் இணைந்தார். சமீபத்தில் லண்டன், இங்கிலாந்து என வெளிநாட்டில் தான் இருப்பதை தன் ஸ்டேட்டஸ் மூலம் பதிவிட்டிருந்தார்.
அதோடு அவர் தன் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்துகொண்டு நடனம் ஆடிய புகைப்படங்கள் வெளியானது. தற்போது ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது.
இதில் வரும் 12 ம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். ரசிகர்கள் மற்றும் பலர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.