சமஷ்டியையே நாம் கோருகின்றோம்! விசேட அதிகாரங்களைக் கோரவில்லை: சி.வி.கே.சிவஞானம்

180

வடக்கு – கிழக்கு இணைந்த மாநிலத்துக்கு நாம் விசேட அதிகாரங்களைக் கோரவில்லை. நாட்டைப் பிரிக்குமாறும் கோரவில்லை. சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோருகின்றோம். இந்த சமஷ்டித் தீர்வை சிங்களத் தலைவர்களே முதலில் முன்வைத்தார்கள்.

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்டத்தில் நாட்டைப் பிரிக்கின்ற முன்மொழிவு எதனையும் முன்வைக்கவில்லை. இலங்கையின் தற்போதைய அர சமைப்பை மீறவும் இல்லை.

சமஷ்டியைத் தீர்வாகக் கேட்டிருக்கின்றோம். இதனை நாம் இப்போது புதிதாகக் கேட்கவில்லை. தந்தை செல்வாவின் காலத்திலிருந்தே இதனை வலியுறுத்தி வருகின்றோம்.

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் தீர்வுத் திட் டத்தைக் கையளித்த போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், சமஷ்டியை நாம் ஆரம்பம் முதல் கோரி வருகின்றோம். வடக்கு – கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருகின்றோம். ஆனால், கபடமான முறையில் வடக்கு – கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.

நாங்கள் வடக்கு – கிழக்கு இணைந்த மாநிலத்துக்கு விசேட அதிகாரம் கோரவில்லை. இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் போன்று அதிகாரங்களைக் கோரவில்லை.

சிங்கள ஊடகங்கள் நாங்கள் சமஷ்டி என்று கோரியதை தவறாக அர்த்தப்படுத்தியுள்ளன. சிங்கள மக்களைத் தெளிவுபடுத்த வேண் டும்.

சிங்களத் தலைவர்கள்தான் முதன் முதலில் சமஷ்டியைக் கோரினார்கள். இதனை நாம் எமது தீர்வுத் திட்ட முன்மொழிவில் குறிப்பிட்டுள்ளோம்.

மேலும், இந்த முன்மொழிவு ஒட்டுமொத்த வடக்கு மாகாண சபையினுடையது என்றார்.

c-v-k-sivagnanam-1-720x480

SHARE