தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தவர் சமீரா ரெட்டி. இவருக்கும், தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவருக்கும் ஜனவரி 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சமீரா கடைசியாக ராணா டக்குபதியின் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்ற படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.