புளியங்குளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக தற்போது கடமையாற்றிவரும் ந.கபில்நாத், பகுதிநேர ஊடகவியலாளருமாக செயற்பட்டுவருகின்றார். அண்மையில் இவர் தொடர்பாக www.tnnlk.com என்கிற இணையத்தளத்தில் புளியங்குளம் கிராமத்திற்கென வழங்கப்பட்ட 100,000ரூபாய் பெறுமதியான தற்காலிக வீடுகள் அமைக்கும் விடயத்தில் ஊழல் இடம்பெற்றதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் ஒருசில மக்களது குரல்பதிவுகளும் ஆதாரங்களாக இவ் இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. இச்சம்பவத்திற்கெதிராக இன்றையதினம் (15.07.2016) மாலை 5.00 மணியளவில் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையத்தில் மானநஷ்டத்தினைக் கோரும் வகையிலான முறைப்பாடு ஒன்று இவரால் பதியப்பட்டுள்ளது.