சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பில் மீளாய்வு

316
சமுர்த்தி கொடுப்பனவு பெற்றுக்கொள்ளும் 40 வீதமானவர்கள் அரசியல் ரீதியாக பரிந்துரைக்கப்பட்டவர்கள் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி சமுர்த்தி தலைமைக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் பட்டியல்களின் அடிப்படையிலேயே நாற்பது வீதமா னவர்கள் சமுர்த்தி கொடுப்பனவு பெற்றுக்கொள்ள தகுதி பெற்றுக்கொண்டு ள்ளனர்.
எனவே, தற்போது சமுர்த்தி கொடுப்பனவு பெற்றுக் கொள்வோர் தொடர்பில் சரியான மதிப்பீடுகளை மேற்கொண்டு மெய்யாகவே வறுமையில் வாடு வோருக்கு இந்த  திட்டம் கிடைக்கும் செயன்முறையொன்று விரைவில் உருவா க்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
SHARE