சமூகவலைதளங்களில் பரவும் சசிகலா புஷ்பாவின் அவதூறு புகைப்படங்களை உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என்றுடெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

431

 

சமூகவலைதளங்களில் பரவும் சசிகலா புஷ்பாவின் அவதூறு புகைப்படங்களை உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என்றுடெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

625-500-560-350-160-300-053-800-900-160-90 fb_img_1463735029576

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்த அவதூறு செய்திகள் மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தன்னை பற்றிய அவதூறு செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடந்த மாதம் ஒருவர் தன்னை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கூறி மிரட்டியதாகவும், ராஜினாமா செய்யவில்லை என்றால் நடத்தை குறித்து தவறான வதந்திகளை பரப்பப்போவதாக மிரட்டினார்.

இதனால் என்னைப் பற்றிய அவதூறான செய்திகள், படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சசிகலா புஷ்பாவின் அவதூறு படங்களை உடனடியாக சமூகவலைத்தளங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான புகைப்படம், செய்தி வெளியிடுவதும் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

SHARE