
ஆத்விக்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் அஜித் – ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
