சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த தன்யா ராஜேந்திரன் என்ற பெண் பத்திரிக்கையாளர் விஜய்யின் சுறா படத்தை விமர்சித்து ட்விட் செய்ததையடுத்து அவரை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் சரமாரியாக திட்டியுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் இதற்கு எந்தப் பதிலையும் அளிக்காமல் இருப்பது குறித்தும் தன்யா ராஜேந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்
இதனையடுத்து இன்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது
சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்துச் சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.
அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.