பரியேறும் பெருமாள் திரைபடத்தின் மூலம் திரை உலகத்திற்க்கு இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.
அதனைத் தொடர்ந்து இவரின் கர்ணன், மாமன்னன் திரைப்படமும் அடுத்தடுத்து வெற்றியை சந்தித்தது. மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ், உதயநிதி உடன் சேர்ந்து பணியாற்றியதன் மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
நச் பதிலடி
சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியில் அளவுக்கு அதிகமாக மழை பெய்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளனர். தாமிரபரணி நீர் ஒட்டு மொத்தமாக ஊருக்குள்ளே புகுந்து விட்டது, இதனால் பல சிறிய கிராமங்ளும் நிறைய மக்களின் வீடுகளும் மூழ்கி விட்டது.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மாரி செல்வராஜும் சேர்ந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வளைதளங்களில் மாரி செல்வராஜ் யாரு? அவர் என்ன அமைச்சரா? இல்லை என நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று குறிப்பிட்டுள்ளார்.