இளைய தளபதியின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதிலும் சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் விஜய் பற்றிய செய்திகளை எப்போதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் திடிரென்று விஜய் ரசிகர்கள் பலரும் தங்கள் Profile picture-யை மாற்றியிருந்தனர். எல்லோரும் ஒரே மாதிரி விஜய் படங்களை வைத்தனர்.
ஏனெனில் துப்பாக்கி படம் வெளிவந்து இன்றுடன் 3வருடம் ஆகின்றது. இதை கொண்டாடி விஜய் ரசிகர்கள் 3YearsOfBlockbusterThuppakki என இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
மேலும், சரிந்திருந்த இளைய தளபதி மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது துப்பாக்கி படம் தான். துப்பாக்கி படக்குழுவினர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்