நீங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர்-ல் அதிகம் உலாவிக் கொண்டிருக்கும் நபர் என்றால்… நீங்கள் GIF எனப்படும் படங்கள் அதிகம் காண்பவராக, பகிர்பவராக இருந்தால் இந்த இளம்பெண் புகைப்படத்தை பல முறை கண்டிருப்பீர். பலர் ரசித்தும் இருப்பார்கள். இவரது முக பாவனைகள் பலவன GIF வடிவில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளன.
இவர் யார், எந்த ஊர், இவரது பின்னணி என்ன என்று கூட தெரியாமல் இவரது படத்தை பலர் தங்கள் மொபைல் வால்பேப்பராக வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது…
இந்த அழகு பெண்ணின் பெயர் சௌ சு யு. இவர் தென்கொரியாவில் உள்ள டாய்னன் எனும் பகுதியை சேர்ந்தவர். இவர் பள்ளி பயின்றுக் கொண்டிருக்கும் பெண். இவர் தோற்றம் மட்டுமல்ல, இவரது குரலும் மிக அழகானது தான். இவர் ஒரு பாடகியும் கூட.
இவரது குரலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட பைத்தியம் என்றே கூட கூறலாம். இவரை கே – பாப் கேர்ள் என சமூக தளங்களில் அழைக்கின்றனர்.
இவர் சென்ற வருடம் ஒரு டிவி நிகழ்ச்சியில் தோன்றியிருந்தார். சௌ சு யு கடுமையாக பயிற்சி மேற்கொள்ளும் தன்மை கொண்டவர். இவர் சிறந்த புது பெண் இசை கலைஞர் என்ற எம்நெட் ஆசிய விருது 2015-ம் ஆண்டு வென்றவர். இந்நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற போது பல இதயங்களை வென்றார்.
சீன ஊடகங்கள் முன் இவர் தைவான் கோடியை பறக்கவிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்காக பின்னர் சௌ சு யு மன்னிப்பும் கோரினார்.