சமைக்கும் போது இதெல்லாம் செய்யாதீங்க!

260

625.500.560.350.160.300.053.800.748.160.70

உலகில் எங்கு போனாலும் நம் அம்மாவின் கைவண்ணம் வரவே வராது என்று சொல்பவர்கள் ஏராளம். ருசியை மட்டுமின்றி பாசத்தையும் கலந்து பரிமாறுபவர்கள் அம்மா மட்டுமே, இவர்களுக்கு சில டிப்ஸ்.

  • ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
  • காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
  • மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
  • கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
  • காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
  • சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
  • தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
  • பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
  • பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
  • தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
  • குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
  • குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

SHARE