சமையல்… சமையல்… சமையல்…

514

 

samayal

சிகப்பு அவல் தோசை
தேவையானவை:
புழுங்கல் அரிசி – 3 கிண்ணம்
முழு உளுந்து – 1 கிண்ணம்
சிகப்பு அவல் – 1 கிண்ணம்
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை: மேற்கூறிய அனைத்து பொருள்களையும்
சுத்தம் செய்துவிட்டு 4-5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.  பிறகு அரிசியுடன் கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். உளுந்தும், அவலும் சேர்த்து நன்றாக மைய அரைக்கவும். (அரைக்கும் போது உப்பு சேர்க்க வேண்டாம்). இரவு அரைத்து வைத்து மறுநாள் தோசை வார்த்தால் மிகவும் மிருதுவாக வரும்.
பயன்கள்: சிகப்பு அவலில் பி.விட்டமின் சத்து உள்ளது. இது நரம்புகளை உறுதிப்படுத்தும்.

கொள்ளு இட்லி பொடி

தேவையானவை:
கொள்ளு – அரை கிண்ணம்
உளுத்தம் பருப்பு – 1 கிண்ணம்
கருப்பு எள் – 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 5
கட்டி பெருங்காயம்  – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை: வாணலியை சூடு செய்து அதில் கொள்ளை நன்றாக வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு உளுத்தம் பருப்பை சிவக்கும் வரை வறுக்கவும். கருப்பு எள்ளை வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு, சிறிது எண்ணெய்விட்டு மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுக்கவும். வறுத்த பொருள்கள் அனைத்தும் சூடு ஆறிய  பிறகு மிக்ஸியில்  முதலில் மிளகு, எள்ளைப்போட்டு நன்றாக அரைத்த பிறகு பருப்பு, கொள்ளு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒன்றாக கலக்கவும்.
குறிப்பு: காரம் குறைக்க சிறிது பனை வெல்லப் பொடி சேர்த்துக் கொள்ளலாம். அதில் இரும்புச் சத்து உள்ளது.  கொள்ளு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்க வல்லது. எள்ளு இரும்பு சத்து மிக்கது, உளுத்தம்பருப்பு கால்சியம் மிகுந்தது.

வரகு அரிசி குணுக்கு

தேவையானவை:
வரகு அரிசி – முக்கால் கிண்ணம்
புழுங்கல் அரிசி – முக்கால் கிண்ணம்
துவரம் பருப்பு – கால் கிண்ணம்
பயத்தம் பருப்பு – அரை கிண்ணம்
மிளகாய் வற்றல் – 5
உப்பு – தேவையானவை
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
கோஸ் அல்லது சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
கொத்துமல்லி – 1 கைப்பிடி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: மேற்கூறிய பொருள்களில் அரிசி, பருப்பு வகைகளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, ஊறிய அரிசி, பருப்பு வகைகளுடன் மிளகாய்வற்றல் சேர்த்து கொரகொரவென்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் உப்பு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி, கோஸ் அல்லது சின்ன வெங்காயம் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய வைத்து கலந்து வைத்துள்ள மாவு கலவையை சிறிது சிறிதாக கிள்ளி போடவும்.   நன்றாக வெந்து சிவந்து வந்ததும் எடுத்துவிடவும். சுவையான வரகு அரிசி குணுக்கு தயார்.

பச்சை சுண்டைக்காய் வெந்தய குழம்பு

SHARE