சம்பந்தனுக்கு வித்தியாசமாக பிறந்த தின பரிசு வழங்கிய சிவமோகன்-இருகரம் கூப்பி வரவேற்றது தமிழிழரசு கட்சி

251
வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  சிவமோகன் , நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும்  பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான சம்பந்தனின் பிறந்தநாளை  முன்னிட்டு   இலங்கை தமிழரசுக் கட்சியில்  இணைந்து கொண்டார்.

மிக வித்தியாசமான முறையில் தான்  பிறந்த தின பரிசினை வழங்க தீர்மானித்ததாகவும்  தனது அன்பையும் பேராதரவையும்  தெரிவிக்கவே தான் நேசிக்கும்  அன்பான  தலைவரின் கட்சியில் இணைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.

இவ்வாறு தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்ட சிவமோகன் கடந்த வட மாகாணசபைக்கான தேர்தலிலும் அதன் பின்னர் கடந்த ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய போதும் அண்மைக்காலமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மீது அதிருப்தியை வெளியிட்டிருந்த அவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலமையகத்தில் வைத்து கட்சியின் தலைவர் மாவை .சேனாதிராஜாவிடம் அங்கத்துவத்தினைப் பெற்று கட்சியில் இணைந்து கொண்டார்.

SHARE