சம்பந்தனும்,மாவையும் துரோகிகள் தானே என்னைமட்டும் ஏன்கேள்வி கேட்கிறீர்கள்! ஜனா கேள்வி

250

 

நான் மட்டு மா? துரோகம்  செய்தேன் சம்பந்தன், மாவை போன்றோரும் செய்தனர் ,செய்கின்றனர் இவர்களை விட்டு விட்டு என்னிடம் மட்டும் ஏன்கேள்வியைஎழுப்புகிறீர்கள்”

913_1445060270_jana-1 (1)
இவ்வாறுவினாவினார்கிழக்குமாகாணசபைஉறுப்பினர்கோவிந்தன்கருணாகரன்ஜனாஎன்றுஅறியப்படும்இவர். இன்று அரசதரப்பு உறுப்பினராக மாறியுள்ள செல்வம்அடைக்கலநாதன், வடமாகாணசபைஉறுப்பினர்எம் . கே .சிவாஜிலிங்கம், அம்பாறை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் சகிதம் பிரான்சின் லாச்சப்பல் என்ற இடத்தில் கலந்துரையாடல் ஒன்றுக்குச் சென்றார்.

 

அங்கு இவரைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த தமிழர்களைக் குறிப்பாக மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர்களைப் பார்த்தே இவர் இவ்வாறு கூறினார்.
கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்திரா உணவகத்தில் இக் கலந்துரையடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அஜீபுசி என்னும் இறைச்சிக் கடையின் உரிமையாளர் பாஸ்கரனே இதன் ஏற்பாட்டாளர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினாரால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததாகக்குறிப்பிடப்பட்டிருந்தாலும் டெலோவால் தெரிவுசெய்யப்பட்ட சிலரே இக்கலந்துரையாடலில்கலந்துகொண்டிருந்தனர்.

 

ஜனா கலந்து கொள்கிறார் என்பதைக் கேள்வி யுற்றதும் சுமார்  200பேர் ஜனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்அங்கு நின்றிருந்தனர்.

இவர்களில் பெரும் பான்மையானோர் ஜனவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள். ஜனா டெலோவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இருந்தகாலத்தில் நூற்றுக்க கணக்கான இளைஞர்கள்,பல போராளிகள்கொல்லப்பட்டனர்
குருசாமி,சிவம் ஆகிய போராளிகளை ஜனா உலக்கையால் அடித்துக்கொன்றார். இயக்கத்திலிருந்து விலகி களுவாஞ்சிக்குடி சந்தையை குத்தகைக்குத் எடுத்து நடத்திக் கொண்டிருந்த மாறன் என்ற முன்னை நாள் போராளி ஜனாவின் உத்தரவுக்குகமைய காணமல்போனார்.

ஆரையம்பதியில் கலா என்ற போராளியை கழுத்து வெட்டிக் கொன்றார். டெலோவினர் கடந்த தேர்தலின் போது கலாவின் வீட்டுக்கு வாக்குச் சேகரிக்க சென்ற ஜனாவை கலாவின் மருமகன் மறித்தார் .எங்களது மாமாவை கொன்று விட்டு வாக்குக் கேட்க வாவருகிறீர். எனக்கேட்டார். கடும்ரகளைகளும் ஏற்பட்டது. விஜி என் உயர்தர மாணவியைக் கைது செய்து கூட்டுப்பாலியல் வன்முறைக்குகுள்ளாக்கி விட்டு கொலை செய்து ஆற்றில் வீசினர்டெலோவினர் .மலர் என் கிறகர்ப்பிணி, வங்கிப்பணியாளரான அவரது அண்ணன்குருகுலசிங்கம், இவர்களது தந்தை வர்த்தகர்தம் பிராஜா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைத் தனித்தனிச் சம்பவங்களில் கொன்றனர்.

 

பிரதீஸ் என்ற மாவீரரின் அன்னை திருமதி பூரணலட்சுமியைச் சுட்டுக்கொன்றனர். இவ்வாறாக ஜனாவின் தலைமையில் நடந்த சம்பவங்களுக்கு பெரியபட்டியலே உண்டு.

 

கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது குருமன்வெளியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ” மக்களே நான் செய்த தவறுகள் அனைத்தையும் மன்னித்துக் கொள்ளுங்கள் ” என்று பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் ஜனா.தமிழ்த்தேசியத்கூட்டமைப்பில் போட்டியிட்டதாலும் ,மட்டு மண்ணின் மைந்தர்களின் மன்னிக்கும் குணத்தாலும் மாகாணசபை உறுப்பினரானார்இவர் .

இதற்குப் பின்னர் தான் திமிர்கூடிய துஜனாவுக்கு . தனக்கு நிரந்தரமாக ஒரு வாக்கு வங்கி இருப்பதாக நம்பினார். அவர் நம்பினால் பரவாயில்லை மட்டு மண்ணின்மணாளன், இம் மண்ணின்மைந்தன் என இரு புலம்பெயர்பத்திரிகையாளர்களும்நம்பினர். ஏனெனில் இவர்களது குடும்பத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை.

இவர்கள் ஜனா ஒரு சுத்தமான சூசைப்பிள்ளை என முயன்றனர் முயல்கின்றனர்.
இவர்கள் இருவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு தாங்களே கல்லெடுத்துக்கொடுத்து கொத்தனார்வேலைசெய்ததாககூறவும் தயங்குவதில்லை.

ஆனால் ஜனாவால் பாதிப்படைந்த  குடும்பங்கள் அவரை மன்னிக்கத யாராக இல்லை. இந்திரா உணவகத்திற்கு வெளியே நின்று ஜனாவே எமது கேள்விகளுக்கு பதில் சொல், என்று கோஷமெழுப்பினர் .
அன்றைய கலந்துரையாடலில்  ,பாஸ்கரன் ,சந்திரன் ,ஆகிய தமிழர் ஒருங்கணைப்புகுழு உறுப்பினர்களும் இருந்தனர்.
இந்தச் சந்திப்பில் மிகவும் பரிதாபத்திற்குகுரியவர் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தான். இந்தத் தேர்தலுக்கு முன் இவருக்கும் டெலோவுக்கும் சம்பந்தம் இருக்கவில்லை.

அறப்போர் வீரர் அரியநாயகத்தின் வழித்தோன்றல் பரம்பரையாக தமிழரசுக்கட்சிக்காரர் . கடந்ததேர்தலில் தமிழரசுக்கட்சியின் கோட்டாவில் இடம் கிடைக்க இல்லை .அதனால் திருக்கோயில் பகுதியிலுள்ள தமிழ்உணர்வாளர்கள் டெலோகட்சிக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவில் இவரைப் போட்டியிட வைத்தனர் .

ஜனா புரிந்த அராஜகம்பற்றி பெரிதாக அறிந்திராத அவர் பிரான்சில் இத்தனைபேர் அவரைப்பற்றி அறிந்துள்ளனரே என ஆச்சரியப்பட்டார் .
குழப்பம் பெரிதாகியது ஜனா வெளியேவா எனச்கூச்சலிட்டனர் எதிர்ப்பாளர்கள், வர முடியாது எனத்தர்க்கம் புரிந்தனர் டெலோவினர். இந்தக் குழப்பங்களுக்கு மத்தியிலும் பிரபாகரன் தனக்கு புனிதநீர் தெளித்து தமது பாவங்களைப் போக்கியபின்னரே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில்இணைத்துக்கொண்டார் . எனும் பாணியில் விளக்கமளிக்க முனைந்தார் சிவாஜிலிங்கம். ஆனால் இறுதியுத்தம் முடிந்துகளத்தில் புலிகள் இல்லாமல் போனதின் பின்பே டெலோவின் ஜனா ,ஈ.பி.ஆர்.எல் .எப்வின் இரா.துரைரத்தினம் ஆகியோரின் மீள் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது என்பதை வசதியாக அவர் மறந்துவிட்டார். இந்நிலையிலேயே  ” நான்மட்டுமாதுரோகம்செய்தேன் ? மாவை , சம்பந்தன்ஆகியோரும்துரோகம்புரிந்தனர் , புரிகின்றனர் எனக்கூறினார் ஜனா .

SHARE