சம்பந்தன் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்!
கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கைதிகளுக்கு சார்பாக ஆங்காங்கே இடம்பெற்றுவந்த உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை ஒன்றுதிரட்டி சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வவுனியாவில் நாளை 17.11.2015 அன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது. ஏற்கனவே வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை அமைச்சர்களும் மற்றும் உறுப்பினர்களும் இந்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும் எமது செய்தி சேவைக்கு அறிவித்துள்ளனர்.
இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நீண்ட காலத்துக்கு பின்னர் பெரும் சக்தியாக இவர்கள் திரண்டு மேற்கொள்ளும் இந்த சாத்வீக போராட்டம், இராஜதந்திர வட்டாரங்களில் பாரிய திருப்புமுனையாக அமைவதோடு, அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.