கூட்டமைப்பினரால் பெண்கள் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளிவருவதாகக் கூறியே இவ்வார்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் த.தே.கூ. தலைவர் இரா சம்பந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகம் வரை சென்றது.
அலுவலகத்திற்கு முன்னால் இரு தலைவர்களின் உருவபொம்மைகளும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு அலுவலக முன்றலில் எரியூட்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாவை சேனாதிராசாவே தமிழ் இளைஞர்கள், விதவைப் பெண்களை மறுமணம் செய்ய வேண்டும் என்றீரே! உமக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இவ்வாறு செய்து முன்னுதாரணமாக நடந்து கொள்வீரா?’ பெண்களாய் பிறந்தது எமது சகோதரிகளின் குற்றமா? உரிமைகளோடு உங்களை நம்பி உதவி கேட்டு வருபவர்களுக்கு வன்புணர்வுதான் உதவியா? போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.