இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இலங்கை –ஜேர்மன் பயிற்சி நிறுவனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை (18) 10.30க்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், கே.கே.மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.