சம்பந்தன் வட மாகாணத்தின் புதிய ஆளுநரான சுரேன் ராகவனுக்கு ஆலோசனை .

180

யுத்தத்தினால் வடக்கு மகாணமும், அங்குள்ள மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்களின் தேவையறிந்தும், அவர்களின் மனதை வெல்லும் வகையிலும் திறம்பட பணியாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வட மாகாணத்தின் புதிய ஆளுநரான சுரேன் ராகவனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியேபோதே அவர் இந்த ஆலோசனையை வட மாகாண புதிய ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.

அத்துடன் இந்த சந்திப்பானது திருப்பதிகரமாக அமைந்ததாகவும், இதன்போது வடக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான கல்வி, காணி, தொழில், அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

SHARE