சம்பள உயர்வு உட்பட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

605

தமது சம்பள உயர்வு உட்பட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சேவையின்  ஒருங்கிணைந்த தொழிற் சங்க ஒன்றியம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் முன்னெடுத்தது.

கண்டி மாவட்ட செயலகத்திற்கு முன் ஆரம்பித்த இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யட்டிநுவர வீதி மற்றும் தலதா வீதி ஆகியவற்றினூடாகச் சென்று கண்டி மணிக் கூண்டுக் கோபுரத்தை வந்தடைந்தது.

தற்போது வழங்கப்படும் எம்.என் 2 என்ற சம்பள அலகை  எம்,எம். 4 என்ற சம்பள அலகிற்கு உயர்த்தும்படி வேண்டுகோள் விடுத்ததுடன் இன்னும் சில கோறிக்கைகளையும் முன்வைத்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

SHARE