சம்மந்தனும், சுமந்திரனும் சுதந்திரதின வைபவத்தில் பங்குபெறுவர்.

289

இலங்கையின் 68வது சுதந்திரதின வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமாகிய சுமந்திரன் அவர்கள் பங்குபற்றுவாரென புலனாய்வுத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்க்கட்சி என்ற ரீதியில் பங்குபெறவேண்டியதன் தேவை ஏற்பட்டதன் காரணமாகவே தாம் இந்நிகழ்வில் பங்குபற்றவிருக்கின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே முன்னர் இடம்பெற்ற இலங்கையின் 67வது சுதந்திரதின வைபவத்தில் இவர்கள் பங்குபற்றியிருந்தமை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்திருந்தது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இம்முறை இடம்பெறவிருக்கும் இலங்கையின் 68வது சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இவ்விருவரையும் தவிர எவரும் பங்குபற்றப்போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

sampanthan-sumanthiran-300-news

SHARE