சம்மாந்துறை வரலாற்றில்முதல்தடவையாக பெண் ஒருவர் வரலாற்றுச்சாதனை!

163

சம்மாந்துறை வரலாற்றில் இலங்கை கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில் முதல்தடவையாக ஒரு பெண்மணி சித்தியடைந்துள்ளார்.

சம்மாந்துறை அல் முனீர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி அப்துல்காதர் நுஸ்ரத் நிலுபரா என்பவரே இவ்வரலாற்றுச்சாதனையைப் புரிந்துள்ளார்.

இதுவரைகாலமும் சம்மாந்துறையிலிருந்து பெண் ஒருவர் இவ்வுயர் பரீட்சையில் சித்தியடைந்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90

இவ்வரலாற்றுச்சாதனை புரிந்த ஆசிரியை செல்வி ஏ.சி.என்.நிலுபராவைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவிப்பதற்காக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் இன்று வியாழக்கிழமை நேரடியாகப் பாடசாலைக்குச் சென்றார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1

அவருடன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீரும் உடன் சென்றிருந்தார். அங்கு பணிப்பாளர் நஜீம் ஆசிரியையைப் பாராட்டுகையில் சம்மாந்துறை வரலாற்றில் தமது காலத்தில் இச்சாதனையை புரிந்தமையையிட்டு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-2

கடந்த சில வருடங்களாக தனது காலத்தில் சம்மாந்துறை வலயம் கல்வியில் எழுச்சி பெற்றுவருவதனையிட்டு சம்மாந்துறைக் கல்விச்சமுகம் பாராட்டியதாக தெரிவித்த அவர் இதற்கு காரணமான உங்களைப் போன்ற ஆசிரியர்களை வலயம் சார்பில் மனதாரப் பாராட்டுகின்றேன்.

பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜாபீரும் வாழ்த்துத்தெரிவித்துப் பேசினார். ஆசிரியை நிலுபராவும் ஏற்புரை வழங்கி சகலருக்கும் நன்றி தெரிவித்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-3

ஒரு வலயக்கல்விப்பணிப்பாளர் நேரில் வந்து எமது காலடிக்கு வந்து வாழ்த்துத்தெரிவித்த சம்பவம் இதுவே எனது வாழ்வில் முதற்றடவையாகும் .அதனை என்னால் மறக்கமுடியாது எனவும் கண்ணீர்மல்க மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.

SHARE