கடந்த பொதுத்தேர்தலின் போது நீர்கொழும்பு நகரில் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறை தண்டணை அனுபவித்து வந்த முன்னாள் அமைச்சர் சரத்குமார குணரத்ன இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
5 லட்ச ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணையிலும் இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரனகமகே அவர்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய நீதிபதியிடம் கொண்டு செல்லப்பட்ட இவ்வழக்கு விசாரணையானது போதுமான சாட்சிகள் இன்மையால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.