சரத் என் சில்வாவிற்கு நெருக்கமான நீதவான் தாஜூடீன் வழக்கில்?

304

 

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு மிகவும் நெருக்கமான நீதவான் ஒருவர் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கு குறித்த விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசாரணை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த இதுவரை காலமும் இந்த விசாரணைகளை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், சரத் என் சில்வாவின் விசுவாசி ஒருவரை இந்த வழக்கை விசாரணைய செய்ய நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதவான் பீரிஸ் மாத்தறை மாவட்ட நீதவானாக எதிர்வரும் ஜனவரி மாதம் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார். இந்த தீர்மானம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது சரத் என் சில்வா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் இதில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நீதவான் நிசாந்த பீரிஸின் இடமாற்றத்தை கால தாமதிக்குமாறு பல தடவைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். எனினும் 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE