நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக அமைச்சர் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
தாம், ஹை-கோப் ஆயுதக் கொள்வனவு குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தமது வங்கிக் கணக்குகள் இன்னும் விடுவிக்கப்படாமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தனுன தெரிவித்துள்ளார்.
தாம் இது தொடர்பில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்த போதும் இன்னும் அதற்கான பதில் கிடைக்கவில்லை என்று தமது முறைப்பாட்டில் தனுன குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்க காலத்தின் போது தனுன மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் கடந்த வருடம் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் அவர் விடுவிக்கப்பட்டார்.