பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தான் தற்போது அனைவரிடத்திலும் பேசப்படுகிறது.
இந்த நிலையில் சரவணன் மீனாட்சி ரட்சிதா அண்மையில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த காணொளியில் தன் கருத்தை முன்வைத்துள்ளதாகவும் பிக் பாஸ் பிரச்சினையில் என்னை இழுக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் ஒன்றையும் முன் வைத்துள்ளார்.
அனைத்து வசதிகளுடன் கூடிய குட்டி சிறை போன்ற வீட்டில் பிக்பாஸ் போட்டியாளர்கள் 100 நாட்கள் அடைக்கப்பட்டு, உலகத்தில் இருந்து அப்பார்பட்டு ஒரு வித்தியாசமான வாழ்க்கை விளையாட்டை விளையாடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் ஒவ்வறு நாளும் சுவாரசியம் நிறைந்ததாக காணப்பட்டுள்ளது.