18-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்து போரிட்ட கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இதில் குஞ்சாலி மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் வருகிறார். இந்த படத்தில் நடிப்பவர்கள் தோற்றங்களை எப்படி வடிவமைத்து உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
தற்போது மோகன்லால், அர்ஜுன் ஆகியோரின் தோற்றங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 40 சதவீதம் காட்சிகளை கடலுக்குள் படமாக்குகின்றனர்.
இந்த படத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த விஷுவல் எபெக்ட்ஸ் தொழில் நுட்ப குழுவினர் பணியாற்றுகிறார்கள். இந்த குழுவினர் 2017-ல் வெளியான பிளேடு ரன்னர் 2049 என்ற ஹாலிவுட் படத்தில் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்க்காக ஆஸ்கார் விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.