சரித்திர படத்தில் சமந்தா! நடை, உடை, பாவனை திடீர் மாற்றம்

241

30-1438252887-samantha-actress-10-600

நடிகை சமந்தா இப்போது தமிழ், தெலுங்கு என கலக்கிக்கொண்டிருப்பவர். விரைவில் திருமண பந்தத்திற்குள் இணைய போகிறார்.தனக்கென்று தனி மார்க்கெட் பிடித்துவிட்ட அவர் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.

காதல் ஒரு பக்கம் இருந்தாலும் படங்களிலும் கமிட்டாகிக்கொண்டிருக்கிறார். 1950, 60 களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களோடு நடித்தவர் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி.

ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்த இவர் சம்பாதித்த அனைத்து பணத்தையும் பின்னாளில் படம் தயாரிக்கிறேன் என்று இழந்தார். கடைசி காலத்தில் மிக வறுமையான நிலையில் இறந்தார்.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை தற்போது தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் ஏற்கனவே நடிகை நித்யா மேனனை நடிக்க வைக்க திட்டமிட்டு இப்போது சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

இதற்காக சமந்தா அந்த நடிகையின் திரைப்படங்கள், வாழ்க்கை வரலாறு என புரட்டிப்பார்த்து நடை, உடை, பாவனை என சாவித்திரி போலவே மாற்றிவிட்டாராம்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் விரைவில் படமாக்கப்படவுள்ளது.

SHARE