இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று காலை கொழும்பில் ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அந்த வகையில்
சில்வா 0
கருணாரட்டன 7
குசல் பெரேரா 16
குசல் மெண்டிஸ் 1
மெத்தியூஸ் 1 என 26 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது இலங்கை அணி. பின்னர் 6 வது விக்கெட் இணைப்பாட்டமாக சந்திமால் மற்றும் டனஞ்சய சில்வா 168 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து ஆடுகளத்தில் உள்ளனர். டனஞ்சய சில்வா தனது 1வது டெஸ்ட் சதத்தினை பெற்றுக் கொண்டார்.
சந்திமால் தனது 11வது டெஸ்ட் அரைச்சதத்தினையும் பெற்றுக் கொடுத்தார். இலங்கை அணி தற்போது 204ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக மிச்சல் ஸ்டாக் 3 விக்கெட்டுகளையும் நதன் லயன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலங்கை அணியானது ஏற்கனவே 2-0 என தொடரை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.