சரியான நெத்தியடி கொடுத்த கமல் ஹாசன்!

182

நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருப்பினும் வரும் 21 ல் அவர் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து இதை அவர் துவக்கவுள்ளார்.ஆனால் சமீபகாலமாகவே கமல் மீது இந்த மதத்திற்கு எதிரான கருத்து சொல்லப்பட்டுவந்தது.

இந்நிலையில் அவர் நான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல. நான் நடத்துவது வாக்கு அரசியல் அல்ல, பகுத்தறிவு அரசியல். வழக்கமான அரசியல் பொதுக்கூட்ட மேடைகளை, கலந்துரையாடல் களமாக மாற்றப்போகிறோம்.

பிப்.21ல் தொடங்கும் கூட்டம் கலந்துரையாடலாகவே இருக்கும், முன்பதிவு செய்து கேள்வி கேட்கலாம் என கூறியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழக்கத்தில் உரையாற்றுவதற்காக இன்று நள்ளிரவில் அவர் அமெரிக்கா செல்கிறார்.

SHARE