பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை அழகிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சருமம் பளபளப்பாக இருக்கும்.
- எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரை முகத்தில் கருமை படர்ந்த இடத்தில் தேய்க்கவும். உலர்ந்த பிறகு கழுவினால் கருமை மாறும்.
- எலுமிச்சை சாறுடன் வினிகரையும் சேர்த்து உடலில் கறுப்பான இடங்களில் தடவி வந்தால் நிறம் மாற்றம் தெரியும்.
- எலுமிச்சை சாறை உணவில் தினமும் சேர்த்து வந்தால் முகத்திற்கு நல்லது.
- எலுமிச்சை சாறு, பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி வரவும்.
- எலுமிச்சை சாறு பிழிந்த பிறகு அதன் தோலை தூக்கி எறியாமல், எலுமிச்சை தோலை கை, கால் விரல் நகங்களை நன்கு தேய்த்து விட்டால் நகங்களில் படிந்திருந்த அழுக்குகள் வெளியேறி நகம் பளிச்சென்று மாறும்.