சரும வறட்சிக்கு உதவும் மாதுளை

272

பொதுவாக சிலருக்கு வெயிற்காலங்களில் முகம் பார்ப்பதற்கு வறட்சியடைந்து பொழிவிழந்து காணப்படுவதுண்டு.

இதற்கு கண்ட கண்ட கிறீம்களை தான் வாங்கி பூச வேண்டும் என்ற அவசியமில்லை. இயற்கையாக கிடைக்கும் பழங்களை கொண்டு இதனை சரி செய்ய முடியும்.

அந்தவகையில் சரும வறட்சியை போக்க மாதுளை பெரிதும் உதவி புரிகின்றது.

மாதுளை தோல். மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தை இளமையாகவும், பொலிவோடும் பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவி புரிகின்றது.

தற்போது மாதுளை வைத்து முகத்தின் வறட்சியை எப்படி போக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • மாதுளை பொடி – 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2-3 துளிகள்
  • தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • பால் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை

முதலில் மாதுளை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்து வெளிக்காட்டும்.

SHARE